அதுதான் ஐஸ்கட்டிகள். வெறுமனே ஐஸ் கட்டிகள் கூட முகத்திலுள்ள அழுக்குகளைப் போக்க உதவும்.
அதில் வெள்ளரிக்காய், கற்றாழை, ரோஸ் வோட்டர், எலுமிச்சை சாறு, தேன், கோப்பித் தூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து விதவிதமான ஐஸ் கட்டிகளை தயாரித்து முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும்.

எலுமிச்சை சாறு – தேன் ஐஸ் கட்டி
இரண்டு கரண்டி எலுமிச்சை சாறு, அரை கரண்டி தேன் கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் சம அளிவிலான நீர் சேர்த்து ஐஸ் கட்டியாக மாற்றியதும் அதனை எடுத்து மெல்லிய துணியொன்றினால் சுற்றி முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

கற்றாழை – வெள்ளரிக்காய் சாறு ஐஸ் கட்டி
கற்றாழை சாற்றுடன் சிறிய அளவிலான முழு வெள்ளரிக்காயை தோல் சீவி ஜூஸாக்கி ஒரு கரண்டி கற்றாழை சாற்றுக்கு ஒரு கரண்டி வெள்ளரிக்காய் ஜூஸ் கலந்து சிறிதளவு நீர் சேர்த்து ஐஸ் கட்டியாக மாற்ற வேண்டும்.

கோப்பித்தூள் – தேங்காய் எண்ணெய் ஐஸ் கட்டி
ஒரு கிண்ணத்தில் நீர் சேர்த்து அதில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து ஃப்ரீசரில் வைத்து கட்டியானது அதனை ஒரு மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஒரேஞ்ச் சாறு – புதினா சாறு ஐஸ் கட்டி
ஒரேஞ்சை உரித்து ஜூஸாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் புதினா இலைகளை எடுத்து அதனையும் அரைத்து சாறு எடுத்து, இரண்டையம் ஐஸ் கட்டியாக மாற்றியபின் அதனையொரு மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
🚩 பொறுப்புத் துறப்பு.
⚠️ அமிழ்து வலைத்தளம் அழகு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம். எந்தவொரு புதிய தயாரிப்புகள் அல்லது சிகிச்சைகளையும் முயற்சிக்கும் முன் தோல் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரை அணுகவும்.
⚠️இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகள் அல்லது விளைவுகளுக்கும் நாங்கள் (அமிழ்து) பொறுப்பல்ல.