ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினரால் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்காகவென அறிக்கை ஒன்று தயார்ப்படுத்தப்பட்டு அந்த அறிக்கையில் பொது மக்களது கையொப்பங்களைப் பெற்று அனுப்பவுள்ளதாகவும் அதற்கு எமது கட்சியின் ஆதரவினை வழங்குமாறும் (24.08.2025) அக்கட்சியின் இணைத்தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் எமது தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் கோரியிருந்தார்.

குறித்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை அனுப்பிவைக்குமாறு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கோரியிருந்தார். அந்த விபரங்களை திரு.சித்தார்த்தன் அவர்கள் எமக்கு வழங்குவார் என்று திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் கூறப்பட்டிருந்தது.
எனினும் இன்று காலைசுமார் 9.30 மணியளவில் குறித்த மகஜரில் உள்ளடக்கப்பட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய வரைபு ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகிய சமத்துவக் கட்சியின் தலைவர் திரு.சந்திரகுமார் அவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த வரைபு கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை ஆராய்ந்து அதில் சில விடயங்கள் உள்வாங்கப்பட்டு திருத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எமது கருத்துக்களை உள்ளடக்கிய வரைபு ஒன்றினை திரு.சந்திரகுமார் அவர்களுக்கு அனுப்பிவைத்தோம்.. எம்மால் அனுப்பப்பட்ட யோசனை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த வரையில் எம்மால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மஞ்சள் நிற அடையாளமிடப்பட்டுள்ளது. அதனை அவர்கள் ஆராய்ந்து அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது.
எமமால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை முழுமையாக உள்வாங்குவதற்கு தமிழரசுக் கட்சியும் இணங்கியுள்ளதாகவும் திரு.சுமந்திரன் அவர்கள் அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் இன்று ரில்கோ விடுதியில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இவ்விடயங்களை ஊடகங்களுக்குத் தெளிவு படுத்தியதுடன எமது கருத்துக்கள் முழுமையாக உள்வாங்கப்படும் என்ற அடிப்படையில் எமது ஆதரவை குறித்த கையெழுத்துப் போராட்டத்திற்குத் தெரிவித்திருந்தோம்.
இக்கையெழுத்துப் போராட்டம் ஒட்டுமொத்த இனவழிப்புக்குமான சரவதேச குற்றவியில் விசாரணையை வலியுறுத்துவதாக அமையவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவையனைத்தும் உள்ளாவாங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது. இன்றைய ஊடக சந்திப்பானது குறித்த அறிக்கையில் பொது மக்களது கையொப்பங்களைப் பெற்று ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புதல் என்ற நோக்கத்திற்காக நடைபெற்றது.
செ.கஜேந்திரன்.
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணி



