நீலகிரி மற்றும் வயநாடு பகுதிகளிலிருந்து கோழிக்கோடு செல்வதற்கு தாமரைச்சேரி மலைப்பாதை வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட காட்சி முனை உள்ளது.

இந்த பகுதியில் இன்று மாலை லேசான மழை பெய்து வந்த நிலையில் திடீரென 7:30 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, இரவு நேரம் என்பதால் அதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக மண் சரிவு ஏற்படுவதால் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகம், கர்நாடகா, வயநாடு பகுதிகளிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் குட்டியடி, மானந்தவாடி மற்றும் நீலகிரி நாடுகாணி, நிலம்பூர் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு உலக மக்களையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போதும் அதே மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் மீண்டும் அச்சத்தை ஏற்டுத்தியுள்ளது.