மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று நிலைமைகள்: மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புத்தளம் முதல் மாத்தறை வரையான கரையோர கடல் பகுதிகளில், குறிப்பாக கொழும்பு மற்றும் காலி வழியாக சில இடங்களில் மழை பெய்யும்.
கடல் நிலைமைகள்: சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகள் (மன்னார் வழியாக) மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகள் (ஹம்பாந்தோட்டை வழியாக) அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படும்.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடல் பகுதிகள் (முல்லைத்தீவு வழியாக) அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.
சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகளில் (மன்னார் வழியாக) மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் (ஹம்பாந்தோட்டை வழியாக) காற்றின் வேகம் மணிக்கு (50-55) கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடல் பகுதிகளில் (முல்லைத்தீவு வழியாக) காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.