மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (ஆகஸ்ட் 30) வங்காலை, ஓமந்தை, வேதமகிழங்குளம், கேலபொகஸ்வெவ மற்றும் திரியாய் ஆகிய இடங்களுக்கு நேராக சரியாக நண்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்.
புத்தளம் முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளிலும், கொழும்பு மற்றும் காலி ஊடாக செல்லும் கடற்பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கடற்பகுதிகளில் காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும். சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளிலும் (புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக), மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் (ஹம்பாந்தோட்டை ஊடாக) காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். சிலாபம் முதல் மாத்தறை வரையான கடற்பகுதிகளிலும் (கொழும்பு மற்றும் காலி ஊடாக), காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடற்பகுதிகளிலும் (முல்லைத்தீவு ஊடாக) காற்றின் வேகம் மணிக்கு 45-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளும் (புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக), மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளும் (ஹம்பாந்தோட்டை ஊடாக) சில நேரங்களில் கொந்தளிப்பாக காணப்படும். சிலாபம் முதல் மாத்தறை வரையான கடற்பகுதிகளும் (கொழும்பு மற்றும் காலி ஊடாக), காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடற்பகுதிகளும் (முல்லைத்தீவு ஊடாக) சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.
நீர்கொழும்பு முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் (காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக) அலைகளின் உயரம் சுமார் 2.5 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.