சென்னையில் நாளை (செப் 01) முதல் டீ, காபி விலை உயர்கிறது என டீக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பால், காபித் தூள், டீ தூள் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளது.

ரூ.10, ரூ.12க்கு விற்கப்படும் வரும் டீ விலை நாளை (செப் 01) முதல் ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. ரூ.15க்கு விற்கப்பட்டு வரும் காபி விலை நாளை முதல் ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்று அறவிக்கப்பட்டதால் டீ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே சில ஆண்டுகளாக ரூ.15க்கு கோவையில் டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.