மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் திங்கட்கிழமை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
பிரிக்கப்பட்டிருந்த எம்மை ஒன்றிணைக்க தேர்தல் தேவையாக இருந்தது எமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒன்றிணைவை மேலும் வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் பிரிந்திருக்க முடியாத நாட்டை உருவாக்கவேண்டும். வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற பேதமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். அதில் விசேடமாக வடக்குமக்கள் எதிர்பார்க்கும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் கவனம் செலுத்தியுள்ளோம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் இருக்கின்றார்கள் அதற்கான நிலத்தை மக்களுக்கு வழங்கவேண்டிய தேவையுள்ளது.
யுத்தத்தினால் பாரிய இராணுவ முகாம்கள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த்து. இனி ஒருபோதும் யுத்த ஆபத்து இல்லை இனி யுத்தம் நடைபெறும் என்று இந்த காணிகளை நாம் வைத்திருக்கவில்லை எமது அரசாங்கம் யுத்தம் இனிமேல் நடக்காது இருப்பதற்காகவே வேலைகளை செய்துவருகின்றது சில அரசாங்கங்கள் யுத்தம் நடைபெற்றாலும் என நினைத்து காணிகளை வைத்திருந்த்து எனவே நாம் மக்களின் காணிகளையும் வீதிகளை மக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்குவோம்.
அடுத்து வடக்குமக்களின் பிரதான வேவையாக மீனவ சமூகத்திற்கான தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.
வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டத்தினால் வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகம் மாத்திரமன்றி, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், குளிர்சாதன சேமிப்பு வசதிகள், வலை தயாரிப்பு நிலைய வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் தொடர்பாடல் பரிமாற்ற மைய வசதிகள் என்பனவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம் 298 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.
கடந்த காலஅரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், இந்த நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப நாங்கள் செயற்பட்டுவருகின்றோம்.
நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது என்றார்.