ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட்டில், உள்ள எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு பயங்கரவாதக் குழு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் எச்சாரித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. ட்ரோன்கள் மற்றும் பிற கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தி ராணுவத்தினர் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது; காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய பயங்கரவாத சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.