கப்டன் இளம்தீ – 05.09.2008 – சாதித்துக் காட்டிய ஒரு பெரும் வீரனாவான்

0

யாழ்ப்பாணம்.

உலகளவில் பரப்புங்கள்
கப்டன் இளம்தீ

யேசுராசா எட்வின்ஜெயராஜ்

யாழ்ப்பாணம்


2007ம் ஆண்டு அமைப்பில் இணைந்த இளம்தீ கனரக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து அதில் தனக்கான பயிற்சிபெற்று போராளிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்த வேளையில் அம்முகாம் பொறுப்பாளராள் கடற்புலிகளின் சிறப்புத் தளபதிக்கு இவரைப் பற்றிய செயற்பாடுகள் தெரியப்படுத்தப்பட்டதால் சிறப்புத்தளபதியால் தனது மெய்பாதுகாப்புப்ணிக்கு உள்வாங்கப்படுகிறார்.

அங்கு சிறிதுகாலம் மிகச்சிறப்பாக கடமையாற்றிக்கொண்டிருந்த  வேளையில் தன்னை சண்டைக்கு அனுப்பும்படி அடிக்கடி சிறப்புத் தளபதியிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இவர் தாக்குதலனிக்கு மாற்றப்படுகிறார்.

கடற்புலிகளின் தரைத் தாக்குதலணியின் அநேகமான சமர்க்களங்களில் அதாவது எம்மால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகினும் சரி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புச் சமராகிலும் சரி பங்குபற்றியவன்.

இவனது தனித்திறமையால் பொறுப்பாளர்களாலும் தளபதிகளாலும் பாராட்டப்பட்டான்.

05.09.2008. அன்று மன்னாரில் எதிரியால் மேற்கொள்ளப்பட்டபாரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடி தமிழீழ மண்ணை முத்தமிடுகிறான்.

குறுகியகாலம் தான் இயக்கத்தில் என்றாலும் அக்காலப்பகுதியில்  எவ்வளவு சாதிக்கமுடியுமே அவ்வளவுக்கு அவ்வளவு சாதித்துக் காட்டிய ஒரு பெரும் வீரனாவான்.

உலகளவில் பரப்புங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *