செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது வியாழக்கிழமை (04.09.2025) குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் போது, வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 227 இலக்கமிடப்பட்டிருந்த என்பு கூட்டு தொகுதியே இருந்த நிலையில் காணப்படுகிறது.
செம்மணியில் இதுவரையில், கட்டம் கட்டமாக 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவற்றுள் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.