தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சிடம் சிவில் செயற்பாட்டாளரான சிரந்த அமெரிக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான தகவல் கோரிக்கையில்,
வேலுப்பிள்ளை பிரபாகரனின், இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டது?, இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன? இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்பட்டது? ( உதாரணம் – தகனம்)
இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? அப்படியானால்அதன் இலக்கம் மற்றும் பிரதேசம் என்ன? ஆகிய வினாக்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.