சென்னையில் இன்று (செப் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நட வடிக்கையால், பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருவது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 04), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,795 ரூபா ய்க்கும், சவரன், 78,360 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 137 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (செப் 05) தங்கம் விலை, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 9,865 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 78,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் (செப் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,005க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 8 மாதங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.