குஜராத்தில் உள்ள மலைக்கோவிலில், ரோப்கார் கயிறு அறுந்து விழுந்ததில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆமதாபாத்

உலகளவில் பரப்புங்கள்

குஜராத்தின் பாவகத்தில் உள்ள மலை உச்சியில் புகழ்பெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல 2000 படிக்கட்டுகள் வழியாக செல்ல வேண்டும். அல்லது ரோப் கார் மூலம் செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு இந்த மலை கோவிலுக்கு ரோப்காரில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தபோது இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ரோப்கார் கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மாவட்ட கலெக்டர் விரைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பஞ்சமஹால் கலெக்டர் கூறியதாவது:

ரோப்வே வழியாக மக்கள் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. ரோப்கார் கயிறு அறுந்து விழுந்ததில் 2 லிப்ட்மேன்கள், 2 தொழிலாளர்கள் மற்றும் இருவர் என 6 பேர் உயிரிழந்தனர்.சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்துக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதாக நிர்வாகம் உறுதியளித்தது.

விபத்து குறித்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. – இவ்வாறு கலெக்டர் கூறினார்.

உலகளவில் பரப்புங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *