பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பஜௌர் மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது திடீரென குண்டுவெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயம் அடைந்தனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், அனைவரும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்த போது பலத்த சத்தத்துடன் ஏதோ வெடித்தது. அப்போது அனைவரும் பீதியடைந்து வெளியேறினோம். சிறிதுநேரம் என்ன நடந்தது என்றே புரியவில்லை என்றனர்.
பஜௌர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., வகாஸ் ரபீக் கூறுகையில், இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். அவர் யார் என்று தெரியவில்லை. குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் உள்ளனர். வெடித்தது குறைந்த சக்தி கொண்ட வெடிபொருள் என்றார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.