கொழும்பில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் வயதான தம்பதியினர் காயம்!

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (09.09.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

68 வயதுடைய வயோதிப தம்பதியே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த வயோதிப பெண்ணுக்கும் வெளிநாட்டில் உள்ள அவரது சகோதரிக்கும் இடையில் உள்ள காணி தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!