இந்திய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை ( 12.09.2025) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியாக “சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்” நாளை( செப்.12) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கடந்த ஜூலை 21 ம் தேதி துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம்( செப்.,09) நடந்தது. இதில், தேஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Related posts

ரஷ்யாவிடமிருந்து 6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது!

100 புதிய விமான நிலையங்கள்; இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

உலக காற்றுத் தர அறிக்கையில் இந்திய நகரம் உலகின் மிக அதிக மாசடைந்த நகரமாகத் தெரிவிப்பு