தமிழர் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கையெழுத்து போராட்டம்.

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளிக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (15) கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை  குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம்  மருதனார்மடம் பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது.

இக் கையெழுத்து மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் போராட்டத்தில் யாழ் மருதனார்மடம் வர்தகர்கள் சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு