“இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்” – அமெரிக்க காங்கிரஸ்

யாழ். செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் டெபோரா ரோஸ் ஆகியோர் ஏற்கனவே தமது எக்ஸ் தளப்பக்கப் பதிவுகளின் ஊடாக தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன வலியுறுத்தப்படுவதை ஆதரிப்பதாகவும், அவை உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ, அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் அடையாளங்காணப்பட்ட மனிதப்புதைகுழியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளுடன் குழந்தையின் பால்போத்தல், பாடசாலை புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பன கண்டறியப்பட்டுள்ளன.

இவை தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கி நகர்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு