நீண்ட காலமாக “கஞ்சா கலந்த மாவா” விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.

நாவாந்துறை – மண்பிட்டி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (17.09.2025) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 470 கிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.