கட்டுநாயக்கவில் தங்க பிஸ்கட்டுகளுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் வியாழக்கிழமை (18.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமானப்படையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய மினுவாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய புலனாய்வு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரி விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரியின் பையிலிருந்து 550 கிராம் எடையுடைய 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!