டல்லாஸில் உள்ள விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டன.

அமெரிக்காவின் டல்லாசில் இரண்டு விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு விமான நிலையங்களிலும் எப்போதும் ஏராளமான பயணிகள் விமானங்களில் பறப்பதைக் காணலாம்.

இந் நிலையில் அங்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிட்டத்தட்ட 1800க்கும் அதிகமான விமானங்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தொலைதொடர்பு சாதனங்கள் செயலிழந்ததே இதற்கு காரணம்.

விமான நிலைய கண்காணிப்பு கோபுரங்களில் ராடார் மற்றும் செல்போன் சிக்னல்கள் சரியாக செயல்படாததால் விமான கட்டுப்பாட்டு அறைகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 2 விமான நிலையங்களில் பல்வேறு விமான நிலையங்களின் 1800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டது.

அமெரிக்க விமான நிறுவனங்களின் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 500க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகின. விமான நிலையத்துக்கு வரும் மற்றும் செல்லும் 700 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரானில் ஆட்சிமாற்றம் ‘நடக்கக்கூடிய சிறந்த விஷயம்’ என டிரம்ப் கருத்து; மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவப் பங்கு அதிகரிப்பு

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நான்சி குத்ரி வழக்கில் சந்தேக நபரின் விவரத்தை FBI வெளியிட்டது; தகவல் வழங்கும் நபருக்கான பரிசுத்தொகை $100,000 ஆக உயர்வு