நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுகம் வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 15, 914 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தனமல்வில பகுதியினைச் சேர்ந்த 30, 31 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!