26.09.2025 நீங்காத நினைவுகளில்…

இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் முல்லை மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் சங்கர் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் பங்குபற்றிவிட்டு ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26.09.2001 அன்று காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், வான்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் / முகிலன் அவர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு