சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரனின் விலை தற்போது ரூ.85,000க்கு மேல் உள்ளது.

சென்னையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம் கிராம், 10,510 ரூபாய்க்கும், சவரன், 84,080 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று (செப் 26) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 10,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 84,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640க்கு விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்துள்ளது.

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!