பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் திமுக அரசு சதி செய்வதாக, பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தி.மு.க., அரசு அமைத்த ககன்தீப்சிங் பேடி குழு, இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதிலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தி.மு.க., அரசு மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்த ஏமாற்று வேலையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில், தி.மு.க., அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது திட்டமிட்ட சதி. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகம். இனியும் தாமதிக்காமல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்!

புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை’ – அ.தி.மு.க.