தமிழ் ஈழப் பெண்கள் எழுச்சி நாள் 2025 – கிளிநொச்சி

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், பாரதிபுரம் வட்டாரத்துக்குட்பட்ட சூசைப்பிள்ளை கடைச் சந்தியில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (10.10.2025) எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் தியாகமும் வீரமும் நிறைந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு