கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 பறவைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி கிம்புல்பொக்க களப்பு பகுதியில் 2025 அக்டோபர் 07 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நூற்று ஐம்பது (150) பறவைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு (01) டிங்கி படகையும் கைப்பற்றினர்.

அதன்படி, 2025 அக்டோபர் 07 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் உச்சமுனை கடற்படைப் பிரிவினால் கல்பிட்டியவின் கிம்புல்பொக்க லகூன் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கு, நூற்று ஐம்பது (150) பறவைகளும் அந்த டிங்கி படகினால் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 மற்றும் 39 வயதுடைய கல்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பறவைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!