தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது!

சென்னையில் இன்று (அக் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 14) ஆபரண தங்கம் கிராம் 11,825 ரூபாய்க்கும், சவரன் 94,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (அக் 15) தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 11,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 94,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,900க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்!

புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை’ – அ.தி.மு.க.