“பழங்கால இந்தியர்கள் மெக்சிகோ முதல் சைபீரியா வரை பயணித்து அறிவியல் மற்றும் கலாசாரம் குறித்து கற்பித்தனர்” – ஆர்எஸ்எஸ் தலைவர்

மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது: நமது முன்னோர்கள் மெக்சிகோ முதல் சைபிரீயா வரை பயணித்தனர். அப்போது உலகிற்கு அறிவியல் மற்றும் கலாசாரம் குறித்து கற்பித்தனர். அவர்கள் மதம் மாற்றவில்லை. அல்லது மதத்தை திணிக்கவில்லை. நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமைக்கான செய்தியுடன் பயணித்தோம்.

பல படையெடுப்பாளர்கள் வந்து நம்மிடம் கொள்ளையடித்தனர். நம்மை அடிமைப்படுத்தினர். கடைசியாக வந்தவர்கள் நமது மனங்களை கொள்ளையடிக்க வந்தனர். நமது பலத்தையும், உலகிற்கு என்ன பகிர்ந்தோம் என்பதையும் நாம் மறந்துவிட்டோம். ஆன்மிக அறிவு இன்னும் செழித்து வளர்கிறது. நம்மிடம், அறிவியல் மற்றும் ஆயுதங்கள், வலிமை மற்றும் சக்தி, நம்பிக்கை மற்றும் அறிவு உள்ளது.

இந்திய அறிவியல் அமைப்பை தான் நாம் படிக்க வேண்டும். மெக்காலே கல்விமுறையை அல்ல. நமது அறிவுத்திறனின் அடித்தளம் அந்தக் கல்வி முறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் காலனித்துவப்படுத்தப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறது. உடலாலும், மூதாதையர்களாலும் இந்தியர். ஆனால், இதயம் மற்றும் மனதால் வெளிநாட்டினர். ஒரே வித்தியாசம் நாம் எந்த அளவுக்கு இருக்கிறோம் என்பது தான். இப்போது நாம் அதில் இருந்து முற்றிலும் விலக வேண்டும். அதிர்ஷ்டவசமாக மேற்கத்திய நாடுகளின் மேம்பட்ட அறிவியல் நாம் கூறுவதை உறுதிப்படுத்தும் ஒரு நிலையை அடைந்துள்ளது.இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Related posts

ரஷ்யாவிடமிருந்து 6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது!

100 புதிய விமான நிலையங்கள்; இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

உலக காற்றுத் தர அறிக்கையில் இந்திய நகரம் உலகின் மிக அதிக மாசடைந்த நகரமாகத் தெரிவிப்பு