கொழும்பில் நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப் படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இந்த நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, கொலன்னாவை, தொட்டிகாவத்த, அங்கொடை,வெல்லம்பிட்டி, ஒருகொடவத்தை, மஹரகம,  பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. 

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு