இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கோல்கட்டாவில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு 166 பேருடன் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விமானம் அவசரமாக வாரணாசியின் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் நடந்தன. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts

ரஷ்யாவிடமிருந்து 6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது!

100 புதிய விமான நிலையங்கள்; இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

உலக காற்றுத் தர அறிக்கையில் இந்திய நகரம் உலகின் மிக அதிக மாசடைந்த நகரமாகத் தெரிவிப்பு