தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் நாளை (07.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மியான்மர் – வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.

தமிழக உள்பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (06.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • சிவகங்கை
  • மதுரை
  • திண்டுக்கல்
  • திருச்சி
  • பெரம்பலூர்
  • அரியலூர்
  • சேலம்
  • கள்ளக்குறிச்சி
  • தர்மபுரி
  • திருப்பத்தூர்
  • திருவண்ணாமலை
  • கிருஷ்ணகிரி
  • திண்டுக்கல்
  • தேனி
  • மதுரை
  • விருதுநகர்
  • சிவகங்கை
  • ராமநாதபுரம்
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • திருநெல்வேலி
  • கன்னியாமகுமரி
  • இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு