ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் சனிக்கிழமை (08.11.2025) ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அவர்களிடமிருந்து 05 கிலோ கிராம் 416 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஊடாக சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 10,811,500 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட காலி, ஹங்கம, தெல்வத்த, வத்துகெதர மற்றும் சீனிகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!