இலங்கையின் கண்டி கிரிந்த பகுதியில் சுமார் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

கண்டி, கிரிந்த பகுதியில் போதைப் பொருட்களுடன் 6 சந்தேக நபர்கள் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 300 கிலோ கிராம் ஆகும். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு