இலங்கையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர்

அநுராதபுரம் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரம் – எப்பாவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 30 வயதுடைய அதிபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடசாலை அதிபரின் மனைவி பேலியகொடை மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை அதிபர், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 185 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் அடங்கிய பொதியுடன் கடந்த 05 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு