தீவிரமடைந்துள்ள ஏழ்மையை ஒழிப்பதற்கு நீண்ட காலத் திட்டங்கள் ஏதும் அறிமுகப்படுத்தப் படவில்லை – ஜே.சி. அலவத்துவல

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தீவிரமடைந்துள்ள ஏழ்மையை ஒழிப்பதற்கு நீண்ட காலத் திட்டங்கள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. சிறு, மத்திய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டுமாயின் அவர்களுக்குரிய சாதகமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் தேசிய உற்பத்தி அதிகரிக்கும். பொருளாதாரமும் முன்னேற்றமடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21.11.2025) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பினால் சிறு ,மத்திய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த பாதிப்பில் இருந்து இவர்களை மீட்பதற் கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அ ரசாங்கமோ அல்லது தற்போதைய அரசாங்கமோ எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் சிறு ,மத்திய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 52 சதவீதம் பங்களிப்பு செய்கிறார்கள். இவர்களின் தவறினால் நாடு வங்குரோத்து நிலையடையவில்லை.ஆனால் வங்குரோத்தின் பிரதிபலனை இவர்கள் இன்றும் எதிர்கொள்கிறார்கள்.

சிறு, மத்திய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்த வேண்டுமாயின் தொழில் முயற்சியாளர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு கொடுக்க வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தீவிரமடைந்துள்ள ஏழ்மையை ஒழிப்பதற்கு நீண்ட காலத் திட்டங்கள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. சிறு ,மத்திய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டுமாயின் அவர்களுக்குரிய சாதகமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அப்போது தான் தேசிய உற்பத்தி அதிகரிக்கும்,பொருளாதாரமும் முன்னேற்றமடையும் என்றார்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!