தமிழ்நாட்டில் தங்கம் விலை உயர்வு.

சென்னையில் இன்று (நவ.,22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,20) ஆபரண தங்கம் கிராம், 11,500 ரூபாய்க்கும், சவரன், 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 173 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (நவ.,21) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 11,460 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 91,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 4 ரூபாய் குறைந்து, 169 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று (நவ.,22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரத்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.172க்கு செய்யப்பட்டு வருகிறது.

Related posts

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்!

புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை’ – அ.தி.மு.க.