மாதம்பிட்டிய தொடர்மாடிக் குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது.

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீஜயசெவன தொடர் மாடிக்குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை (22.11.2025) மாதம்பிட்டி பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 310 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் 28 வயதுடைய கொழும்பு 15 பகுதியை சேர்ந்தவராவார். சந்தேகநபர் தொடர்பில் மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!