பொத்துவில் – உகன பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்து திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (06-12-2025) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உகன பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!