யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று நேற்று திங்கட்கிழமை (08-12-2025) முன்னெடுக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது.

இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைக் கட்டாணை ஒன்றை வழங்கியது.

இந்நிலையில் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு தேவை என்பதை வலியுறுத்தி விளையாட்டு துறைசார்ந்தவர்கள் பேரணியை முன்னெடுத்தனர்.

சென் போஸ்கோ ஆரம்ப பாடசாலை முன்பாக கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக பழைய பூங்கா பகுதிக்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன் இறுதியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தனர்.

Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.