புத்தளம் – வனாத்தவில்லு பிரதேசத்தில் மாட்டிறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

புத்தளம் – வனாத்தவில்லு பிரதேசத்தில் 74 கிலோ 500 கிராம் மாட்டிறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14-12-2025) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக நிலவும் மாட்டிறைச்சி கடத்தல் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் வனாத்தவில்லு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!