ஜனவரி 6 முதல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

தி.மு.க., அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘போட்டோ ஜியோ’ சார்பில், வரும் ஜனவரி, 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, அதன் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார்தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை, பழைய ஓய்வூதிய திட்டம். இதை நிறைவேற்றுவதாக கூறியே, முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார். பதவியேற்ற பின் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டார். இதை அவருக்கு நினைவுபடுத்த, கடந்த நான்கு ஆண்டுகளில், ஏராளமான போராட்டங்களை நடத்தி விட்டோம். இருப்பினும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசின் இந்த நடவடிக்கையால், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தை, முதல்வர் செயல்படுத்தி விட்டால், 70 சதவீத பிரச்னை சரியாகி விடும். ஜார்க்கண்ட், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநில அரசுகள், தேர்தல் வாக்குறுதி அளிக்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.

எனவே, இறுதி கட்டமாக, வரும், 29ம் தேதி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டமும், அதை தொடர்ந்து, வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு