இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும். – இராமநாதன் அர்ச்சுனா

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19-12-2025) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நான் தமிழன், இந்து ஆனால் கையில் அஸ்கிரிய பீடத்தால் எனக்கு கட்டிய பிரித் நூலும், மகாநாயக்க தேரர் கட்டிய பிரித் நூலும் உள்ளன. மகாநாயக்க தேரர்களை சந்தித்து நான் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைத்தேன். ஆனால் இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் என்றே அவர்கள் பதிலளித்தனர். இந்த அரசாங்கம் தமிழ், சிங்கள மக்களுக்கு வேண்டாமென்றாகிவிட்டது.

இதேவேளை தகரங்கள் கழன்றிருந்தால் 20இலட்சம் ரூபா வழங்குவதாக கூறினார்கள். அதனை நம்பி நானும் இரண்டு தகடுகளை கழற்றினேன். அவ்வாறு பணம் கிடைக்காதாம். தகரம் மட்டுமல்ல உள்ளாடை வாங்கவும் பணமில்லாத நிலைமையே உள்ளது உங்களுக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலைமையே உள்ளது. நான் தமிழன். என்னை எந்தவொரு சிங்களவரும் கொல்ல மாட்டார் என்றார். 

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு