இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மேல் கடற்படை கட்டளை கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் நேற்று 27-12-2025 ஆம் திகதி காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு கடற்கரைச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும், மேல் கடற்படை கட்டளைத் தளபதி உட்பட 200க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு