மதவாச்சி – உடும்புகலவத்த பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (27-12-2025) மாலை பதிவாகியுள்ளது.

துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த குறித்த நபர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் துப்பாக்கி வெடித்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!