”புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.” இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

அவர் கூறியதாவது;

நான்காம் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமத்தை நடத்தி வருகிறது. காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. தமிழ் மொழி மிகப்பழமையானது.

நம் கலாசாரத்தின் தொன்மையான மொழி. வட இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலிருந்து நிறைய ஆசிரியர்கள் வட இந்தியாவிற்கு சென்று தமிழ் கற்று கொடுத்து இருக்கிறார்கள். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கான அடையாளம். இந்த காசி தமிழ் சங்கத்தின் அங்கமாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.

கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை சமூகம் ஏற்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!