
10.03.2025 – கொழும்பு
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான மொஹமட் லஃபர் மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மார்ச் 12 ஆம் திகதி மனுவை ஆதரிப்பதற்காக ஒத்திவைத்துள்ளது.
பகிரவும்: