
சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் பலமடையும் – கஜேந்திரகுமார் எம்.பி
யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்றையதினம்(11) மாலை ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்றையதினம் மாலை 6 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
“வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்
தையிட்டி தமிழர் சொத்து
வெடுக்குநாறி தமிழர் சொத்து “
ஆகிய கோசங்களளை போராட்டகாரர்கள் இடிமுழக்கமாக சிங்கள அரசின் சட்டவிரோத செயற்ப்படுகளுக்கு எதிராக முழங்கி வருகின்றனர் .
இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு .கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் பலமடையும் என்றும் தமிழினம் அணிதிரண்டு செய்தியை தெரியப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
பகிரவும்: