
04.03.2025
வட தமிழீழம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் (04.03.2025) பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- “இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”
- “OT வீதத்தை மாற்றாதே”
- “சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே”
- “பதவி வெற்றிடத்தை உடனடியாக நிரப்பு”
போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பகிரவும்: