
திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. இதில் திமுக முன்னிலை வகிக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2025
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 36
- ஆம் ஆத்மி23Seat count of ஆம் ஆத்மி23
- பாஜக+47Seat count of பாஜக+47
- காங்கிரஸ்0Seat count of காங்கிரஸ்0
- மற்ற கட்சிகள்0Seat count of மற்ற கட்சிகள்0
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 9:39 am
இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நிலவரம் என்ன?
ஒன்பதாவது சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 17 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
திமுக – 61,880 வாக்குகள்
நாதக – 13,456 வாக்குகள்
இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என்றும், மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பகிரவும்: